ஆசனூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து ரோட்டில் சிதறிய மக்காச்சோளத்தை சுவைத்த யானையால் பரபரப்பு


ஆசனூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து ரோட்டில் சிதறிய மக்காச்சோளத்தை சுவைத்த யானையால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jan 2022 9:15 PM GMT (Updated: 30 Jan 2022 9:15 PM GMT)

ஆசனூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்து சிதறிய மக்காச்சோளத்தை யானை சுவைத்து தின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி
ஆசனூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்து சிதறிய மக்காச்சோளத்தை யானை சுவைத்து தின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
கவிழ்ந்தது
தாளவாடியில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு மக்காச்சோளம் பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஆசனூரை அடுத்த சீவக்காபள்ளம் அருகே சென்ற போது லாரி கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் எந்தவித காயமும் இன்றி டிரைவர் உயிர் தப்பினார். இதில் லாரியில் இருந்து மக்காச்சோள மூட்டைகள் ரோட்டில் விழுந்தன. மூட்டைகள் விழுந்ததில் அதில் இருந்து மக்காச்சோளம் ரோட்டில் சிதறியது. 
மக்காச்சோளத்தை சுவைத்த யானை
அப்போது யானை ஒன்று அங்கு வந்தது. யானையை கண்டதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். யானையானது கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி அருகே சென்றது. பின்னர் அந்த யானை அங்கு சிதறிக்கிடந்த மக்காச்சோளத்தை துதிக்கையால் எடுத்து சுவைக்க தொடங்கியது. சிறிது நேரம் வரை மக்காச்சோளத்தை எடுத்து அந்த யானை சுவைத்தபடியே இருந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை ரோட்டோரம் நிறுத்திவிட்டு மக்காச்சோளத்தை சுவைத்த யானையை செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story