மின் கம்பியில் உரசியதால் டிராக்டரில் ஏற்றி வந்த சோளத்தட்டு தீப்பிடித்து எரிந்தது

மின் கம்பியில் உரசியதால் டிராக்டரில் ஏற்றி வந்த சோளத்தட்டு தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 30 Jan 2022 9:15 PM GMT (Updated: 30 Jan 2022 9:15 PM GMT)

மின் கம்பியில் உரசியதால் டிராக்டரில் ஏற்றி வந்த சோளத்தட்டு தீப்பிடித்து எரிந்தது

தாளவாடி, ஜன.31-
 தாளவாடியை அடுத்த அருள்வாடி கிராமத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே உள்ள திரக்கனாம்பி பகுதிக்கு சோளத்தட்டு பாரம் ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டு இருந்தது. நேற்று மதியம் தமிழக- கர்நாடக எல்லையான அருள்வாடி குட்டை அருகே டிராக்டர் சென்ற போது மேலே சென்ற மின்கம்பியில் சோளத்தட்டு உரசியது. இதில் சோளத்தட்டு போரில் தீ பிடித்து எரிந்தது. திடீரென சோளத்தட்டில் தீ பிடித்ததும் சுதாரித்துக்கொண்ட டிரைவர் கீழே இறங்கி உயிர் தப்பினார். மேலும் மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் டிராக்டரில் இருந்த சோளத்தட்டு மற்றும் டிராக்டர் எரிந்து நாசம் ஆனது. இதுபற்றி தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story