அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு


அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 Jan 2022 9:15 PM GMT (Updated: 30 Jan 2022 9:15 PM GMT)

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர்
அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
குடிநீர் இணைப்புகள்
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் மைக்கேல் பாளையத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இங்குள்ள ெபாதுமக்களுக்கு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஆற்று நீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு கடந்த 4 நாட்களாக தொடர்ந்து குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். 
சாலை மறியல்
மேலும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதையும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் சீராக வினியோகிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மைக்கேல்பாளையம் நால் ரோட்டில் நேற்று காலை 8.30 மணி அளவில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தை
இதுபற்றி  தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பொதுமக்களிடம் கூறுகையில், ‘மைக்கேல் பாளையம் பகுதி மக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.’
 இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய மறியல் போராட்டத்தை விட்டு விட்டு அங்கு இருந்து கலைந்து சென்றனர். அதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story