கோவில்களில் திருடியவர் கைது


கோவில்களில் திருடியவர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2022 9:53 PM GMT (Updated: 30 Jan 2022 9:53 PM GMT)

கோவில்களில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்

இட்டமொழி:
பரப்பாடி அருகே ஆனிகுளம், விநாயகபுரம் கிராமங்களில் இரவில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருடு போயின. மேலும் விநாயகபுரத்தில் கோவிலில் தங்க பொருட்களும், பொத்தையடி ஆலங்குளத்தில் உண்டியல் பணமும், பரப்பாடி கோவிலில் குத்து விளக்குகளும் திருடு போயின. இச்சம்பவம் தொடர்பாக வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆண்டோ பிரதீப், நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 44) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அவர் மேற்கண்ட இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் உள்பட பொருட்களை மீட்டனர். பின்னர் அவர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே முத்துகிருஷ்ணன் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story