கொளத்தூரில் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை


கொளத்தூரில் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Jan 2022 10:13 PM GMT (Updated: 30 Jan 2022 10:13 PM GMT)

கொளத்தூரில் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொளத்தூர்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் பஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் முத்து (வயது 49). இவர் கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மேகலா (40). இந்த தம்பதிக்கு கவின் பிரபு (18) என்ற மகனும், அரி பிரீத்தா (5) என்ற மகளும் உள்ளனர். முத்துவுக்கும், மேகலாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று முத்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் அங்கு சென்று முத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் ஏட்டு முத்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story