சேலம் மாவட்டத்தில் புதிதாக 1,181 பேருக்கு கொரோனா-முதியவர் பலி


சேலம்  மாவட்டத்தில் புதிதாக 1,181 பேருக்கு கொரோனா-முதியவர் பலி
x
தினத்தந்தி 30 Jan 2022 10:13 PM GMT (Updated: 30 Jan 2022 10:13 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 1,181 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. முதியவர் ஒருவர் பலியானார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,264 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், நேற்று புதிதாக 1,181 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 298 பேர், ஓமலூரில் 28 பேர், வீரபாண்டியில் 25 பேர், காடையாம்பட்டியில் 21 பேர், ஆத்தூரில் 26 பேர், வாழப்பாடியில் 21 பேர், மேச்சேரியில் 18 பேர், எடப்பாடியில் 24 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 703 பேருக்கும், சென்னை, நாமக்கல், கரூர், ஈரோடு, வேலூர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 478 பேருக்கும் என மொத்தம் 1,181 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான அறிகுறி உள்ளவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 952 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,008 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 8 ஆயிரத்து 569 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தை சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,746 ஆக அதிகரித்துள்ளது.

Next Story