எல்லாபுரம் அருகே குட்கா கடத்திய 2 பேர் சிறையில் அடைப்பு


எல்லாபுரம் அருகே குட்கா கடத்திய 2 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 31 Jan 2022 3:50 PM GMT (Updated: 31 Jan 2022 3:50 PM GMT)

எல்லாபுரம் அருகே குட்கா கடத்திய 2 பேர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் பஜார் வீதி உள்ளது. இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக வெங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியே வந்த ஓம்னி காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். இதில் காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் செங்குன்றம் வ.உ.சி. தெருவை சேர்ந்த ஜெயபாலன் (வயது 38), திருவள்ளூர் புதிய தெருவைச் சேர்ந்த புனிதராஜ் (35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். மேலும் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story