பெரியகுளம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் திடீர் ராஜினாமா


பெரியகுளம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 31 Jan 2022 3:52 PM GMT (Updated: 31 Jan 2022 3:52 PM GMT)

பெரியகுளம் அருகே வடபுதுப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் திடீரென்று ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியகுளம்:
பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ரேணுப்பிரியா பாலமுருகன் பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாவட்ட கலெக்டரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 
இதையடுத்து நேற்று வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத்தலைவர் பிரியா செந்தில் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அப்போது ரேணுப்பிரியா பாலமுருகனின் ஊராட்சி மன்ற தலைவர் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் ஊராட்சி செயலர் மணிகண்டன் நன்றி கூறினார். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் திடீரென்று ராஜினாமா செய்த சம்பவம் வடபுதுப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story