பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி வார்டு ஒதுக்கீடு விவரம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 31 Jan 2022 4:36 PM GMT (Updated: 31 Jan 2022 4:36 PM GMT)

பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி வார்டு ஒதுக்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம்
பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 12,பெண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 14, மூன்றாம் பாலின வாக்காளர் 1 என மொத்தம் வாக்காளர்கள் 6 ஆயிரத்து 27 பேர் உள்ளனர். இதில் பேரூராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் உள்ள புதிய வார்டுகளின் விபரங்கள்: 
1-வது வார்டு வடக்கு தொட்டியபட்டி மற்றும் பழையூர் மந்தை (பொதுப்பிரிவு ஆண்,பெண்), 2-வது வார்டு ஓமாந்தூர் காலனி தெரு மற்றும் பிள்ளையார் கோவில் தெரு (பொதுப்பிரிவு பெண்), 3-வது வார்டு ஓமாந்தூர் குடி தெரு, நடுத்தெரு, குப்பு ரெட்டி பட்டி மாரியம்மன் கோவில் தெரு, காலனி தெரு மற்றும் மேற்கு தெரு (பொதுப்பிரிவு ஆண், பெண்), 4-வது வார்டு வடக்கு தொட்டியபட்டி மற்றும் தெற்கு தொட்டியபட்டி (பொதுப்பிரிவு பெண்), 5-வது வார்டு பழைய ஜெயங்கொண்டம் பகவதி அம்மன் கோவில் தெரு, மேட்டு காலனி தெரு, மற்றும் வடக்கு தெரு (ஆதிதிராவிடர் பெண்கள்), 6-வது வார்டு குப்புரெட்டிபட்டி கிழக்கு தெரு, ஆழ்வார் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு மற்றும் பள்ளிக்கூடத் தெரு (பொதுப்பிரிவு ஆண்,பெண்), 7-வது வார்டு புதுப்பட்டி கிழக்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மேற்கு தெரு பொதுப்பிரிவு ஆண், பெண்), 8-வது வார்டு பழைய ஜெயங்கொண்டம் கிழக்கு காலனி தெரு, கிழக்கு களம் மற்றும் தாத கவுண்டம்பட்டி (ஆதிதிராவிடர் பெண்), 9-வது வார்டு பழைய ஜெயங்கொண்டம் ஆலமரத்து தெரு மற்றும் ரைஸ்மில் தெரு (பொதுப்பிரிவு பெண்), 10-வது வார்டு பழைய ஜெயங்கொண்டம் தெற்கு தெரு, குடித்தெரு வடக்கு மற்றும் தெற்கு (பொதுப்பிரிவு பெண்), 11-வது வார்டு உடைய குளத்துப்பட்டி, பாம்பலம்மன் கோவில் தெரு, நடுத்தெரு மற்றும் மேற்கு தெரு (பொதுப்பிரிவு ஆண்,பெண்), 12-வது வார்டு பூவம்பாடி முத்தாலம்மன் கோவில் தெரு, வடக்கு தெரு மற்றும் காலனி தெரு (பொதுப்பிரிவு ஆண்,பெண்), 13-வது வார்டு லட்சுமணம்பட்டி மேற்கு தெரு, தெற்கு தெரு, அழகாபுரி பள்ளிக்கூடத் தெரு, வடக்கு தெரு (பொதுப்பிரிவு பெண்), 14-வது வார்டு லட்சுமணம்பட்டி பிள்ளையார் கோவில் தெரு, வடக்கு தெரு, காலனி தெரு, கிழக்கு களம், பாம்பலம்மன் கோவில் தெரு மற்றும் நடுத்தெரு (பொதுப்பிரிவு பெண்), 15-வது வார்டு புதுப்பட்டி காலனி தெரு, புது காலனி தெரு, தெற்கு தெரு மற்றும் மாமரத்து பண்ணை தெரு (ஆதிதிராவிடர் ஆண், பெண்) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Next Story