ருத்ராவதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


ருத்ராவதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:37 PM GMT (Updated: 31 Jan 2022 4:37 PM GMT)

ருத்ராவதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

குண்டடம்:
வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதால், அதை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ருத்ராவதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
15 வார்டுகளைக்கொண்ட ருத்ராவதி பேரூராட்சிக்கான வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் நூற்றுக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் அவரவர்களின் வார்டு பட்டியலில் இடம்பெறாமல் வெவ்வேறு வார்டு பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.  இதனால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணிக்கு குண்டடம், கோவை ரோட்டில் உள்ள ருத்ராவதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி
 தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் திட்டமிட்ட ரீதியில் பேரூராட்சி அலுவலர்களின் துணையுடன் இவ்வாறு வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். 
மேலும் விரைந்து செயல்பட்டு வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்யாவிட்டால் தேர்தலைப்புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

Next Story
  • chat