அமராவதி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


அமராவதி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:42 PM GMT (Updated: 31 Jan 2022 4:42 PM GMT)

அமராவதி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தாராபுரம்:
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருவது அவர்கள் மனதுக்கு ஆறுதல் அளிப்பதுடன் மட்டுமல்லாது இந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்கள் அவர்கள் ஆசிர்வாதம் வழங்குவார்கள் என்பது  நம்பிக்கை. இந்நிலையில் நேற்று தை அமாவாசை நாள் என்பதால் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள்   குடும்பத்துடன் அமராவதி ஆற்றில் குளித்து விட்டு,முன்னோர்களுக்கு  படையலிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தினர். 

Next Story
  • chat