சாராயம் விற்ற 3 பேர் கைது


சாராயம் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2022 4:51 PM GMT (Updated: 31 Jan 2022 4:51 PM GMT)

சாராயம் விற்ற 3 பேர் கைது


சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் விரியூர், சேஷசமுத்திரம், அரசம்பட்டு பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் காட்டுக்கொட்டாய் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ஞானபிரசாத்(வயது 28), வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்(40) ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

அதேபோல் அரசம்பட்டு முருகன் கோவில் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராமர்(50) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story