கம்பைநல்லூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வேன் காரில் கொண்டு வந்த ரூ2¼ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


கம்பைநல்லூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி  வேன் காரில் கொண்டு வந்த ரூ2¼ லட்சம்  பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Jan 2022 4:54 PM GMT (Updated: 31 Jan 2022 4:54 PM GMT)

கம்பைநல்லூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வேன் காரில் கொண்டு வந்த ரூ2¼ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வேன், காரில் கொண்டு வந்த ரூ.2¼ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கம்பைநல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூர்ணமதி தலைமையில் அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினர். அதில் வேனில் கர்நாடகத்தை சேர்ந்த மதுகுமார் என்பவர் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்தனர். 
பணம் பறிமுதல்
இதேபோல ஓசூரில் இருந்து அரூர் அருகே உள்ள நரிப்பள்ளிக்கு வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த ரமேஷ் என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த மொத்தம் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தினர். உரிய ஆவணங்கள் சமர்பித்த பின் பணத்தை பெற்று செல்லுமாறு பறக்கும் படையினர் அவர்களிடம் அறிவுறுத்தினர்.

Next Story