வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 31 Jan 2022 4:57 PM GMT (Updated: 31 Jan 2022 4:57 PM GMT)

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

தளி:
உடுமலை அடுத்த அமராவதி அருகே உள்ள கரட்டுபதி மலைவால் குடியிருப்பைச் சேர்ந்தவர் கோகுல் (19). இவர் ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகே உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.அத்துடன் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியதாக தெரிகிறது.இந்த நிலையில் அந்த சிறுமி  கர்ப்பமானார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.அதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.  இது குறித்து பெற்றோர்கள் வற்புறுத்திக் கேட்டதன் பேரில் அந்த சிறுமி தனது கர்ப்பத்திற்கு கோகுல் தான் காரணம் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  கோகுலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story