கள்ளக் குறிச்சி சங்கராபுரத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை


கள்ளக் குறிச்சி  சங்கராபுரத்தில்  பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 31 Jan 2022 5:17 PM GMT (Updated: 2022-01-31T22:47:50+05:30)

கள்ளக் குறிச்சி சங்கராபுரத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். ஆனால் இதில் பணம், பரிசுபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

அதேபோல் சங்கராபுரத்தில் பறக்கும் படை அலுவலர் ஜெகன்நாதன் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீஸ்காரர்கள் சுமதி, விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல் பாலமேடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். இதில் பணம், பரிசு பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Related Tags :
Next Story