இந்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்


இந்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:19 PM GMT (Updated: 31 Jan 2022 5:19 PM GMT)

ராமநாதபுரத்தில் இந்து இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம், 

புதுக்கோட்டையில்  ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கணேஷ்பாபுவை கைது செய்ததை கண்டித்து இந்து முன்னணி மற்றும் இந்து இயக்கங்களின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கணேஷ் பாபுவை கைது செய்ததை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் ஆடலரசன், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சண்முகராஜா ஆர்.எஸ்.எஸ். கோட்ட செயலாளர் நாகராஜன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல், ராஜசேகர், இந்து முன்னணி நகரத்தலைவர் பாலமுருகன், நகர பொதுச்செயலாளர் ஆதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story