கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை  கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:24 PM GMT (Updated: 31 Jan 2022 5:24 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

முதன்மைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தலின்படி வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு செய்து மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கணினி அறையில் வைக்கப்பட்ட (Kiosks) எந்திரம் மூலம் மின்னணு வண்ண வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அடையாள அட்டை இல்லாத வாக்கார்கள் தேர்தல் இணையதள முகவரியான http://www.nvsp.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கணினி பிரிவில் காண்பித்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story