திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு


திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 31 Jan 2022 5:37 PM GMT (Updated: 31 Jan 2022 5:37 PM GMT)

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு மார்ச் 27-ந் தேதி நடக்திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு மார்ச் 27-ந் தேதி நடக்கிறதுகிறது

திருக்கடையூர்;
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு மார்ச் 27-ந் தேதி நடக்கிறது.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி கடந்த ஆண்டு திருப்பணிகள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அமிர்தகடேஸ்வரர், அபிராமி, விநாயகர், முருகன், காலசம்ஹாரமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, ராஜகோபுரங்கள், கொடிமரம், தோரணவாயில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
மார்ச் 27-ந் தேதி
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு பணிகள் பழமை மாறாமல் நடைபெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு குடமுழுக்கு நடக்கிறது. விழாவில் அரசின் விதிகளை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
அவருடன் காஞ்சீபுரம் தொண்டைமண்டல 233-வது திருச்சிற்றம்பல தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story