தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி


தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 31 Jan 2022 6:07 PM GMT (Updated: 31 Jan 2022 6:07 PM GMT)

தலைஞாயிறில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

வாய்மேடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சியில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடந்தது. பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர் குகன் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சியின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பூமிநாதன், வித்யா மண்டல அலுவலர் பாலமுருகன், மண்டல உதவி அலுவலர் கொளஞ்சிராஜன் தேர்தல் பிரிவு அலுவலர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சியின் போது வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் ஜீவிதா தலைமையில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி பணியாளர்கள் முருகானந்தம், மணி வண்ணன், அன்பழகன், ஜெயச்சந்திரன், அகிலா, சுரேஷ் குமார் உன்பட பலர் செய்திருந்தனர்.

Next Story