தனியார் பஸ் மோதி பெண் பலி


தனியார் பஸ் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 31 Jan 2022 6:28 PM GMT (Updated: 2022-01-31T23:58:17+05:30)

திருத்துறைப்பூண்டியில் தனியார் பஸ் மோதி பெண் பலியானார். இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் தனியார் பஸ் மோதி பெண் பலியானார். இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
தனியார் பஸ் மோதியது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுகட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர்(வயது50). இவர் தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (45). சம்பவத்தன்று இவர் மடப்புரம் மெயின் ரோட்டில் நடந்து வந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக ஜெயந்தி மீது மோதியது. 
பெண் சாவு 
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகி்ச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி பரிதாபமாக இறந்தார். 
டிரைவர் மீது வழக்கு
இதுகுறித்து ஜெயந்தியின் உறவினர் பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும்  போலீசார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story