நாமக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் ஊர்வலம்


நாமக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 29 April 2022 5:17 PM GMT (Updated: 29 April 2022 5:17 PM GMT)

நாமக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் ஊர்வலம்

நாமக்கல்:
சென்னை, கோவை, புதுச்சேரி, கன்னியாகுமரி என 4 இடங்களில் இருந்து திருச்சியை நோக்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இளைஞர்களுக்கு வேலை கேட்டு சைக்கிள் பிரசார பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணை செயலாளர் பாலச்சந்திரபோஸ் தலைமையிலான கோவை குழுவினர் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து மோகனூருக்கு சைக்கிள் ஊர்வலம் சென்றனர். இதில் மாநில துணை தலைவர் கனகராஜ், நாமக்கல் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
முன்னதாக நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் சைக்கிள் ஊர்வலத்தின் நோக்கம் குறித்து பேசினர். அப்போது நீட் போன்ற போட்டி தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் வலியுறுத்தினர். தொடர்ந்து சைக்கிள் ஊர்வலம் அணியாபுரம் வழியாக மோகனூர் சென்றடைந்தது. அதன் பின்னர் அங்கிருந்து வாங்கல் வழியாக கரூருக்கு அவர்கள் செல்கின்றனர்.

Next Story