காஷ்மீரில் ஆயுதங்கள், வங்கிகள் கொள்ளையடிப்பு; பாதுகாப்பு படைகள் சிறப்பு ஆப்ரேஷனை தொடங்கியது


காஷ்மீரில் ஆயுதங்கள், வங்கிகள் கொள்ளையடிப்பு; பாதுகாப்பு படைகள் சிறப்பு ஆப்ரேஷனை தொடங்கியது
x
தினத்தந்தி 4 May 2017 6:15 AM GMT (Updated: 2017-05-04T11:44:58+05:30)

காஷ்மீரில் ஆயுதங்கள், வங்கிகளை பயங்கரவாதிகள் கொள்ளை அடித்ததை அடுத்து பாதுகாப்பு படைகள் சிறப்பு ஆப்ரேஷனை தொடங்கி உள்ளது.


ஸ்ரீநகர்,


காஷ்மீர் மாநிலம் சோபியானில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் காவலில் இருந்த 5 போலீசார் துப்பாக்கிகளை பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோன்று மாநிலத்தில் வங்கிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு பயங்கரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான சிறப்பு தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளன, ஆனால் உள்ளூர் கல்வீச்சாளர்கள் இந்நகர்வுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். சோபியான் மாவட்டம் ஷாய்னாபோரா பகுதியில் உள்ள 6 கிராமங்கள் இந்த ஆப்ரேஷனானது தொடங்கியது. அப்பகுதியில் அதிமான பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றன என உள்ளீடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கையில் பாதுகாப்பு படைகள் இறங்கி உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது.

சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்கள் வங்கி கொள்ளை மற்றும் ஆயுத பறிப்பு சம்பவங்களை பார்த்து வருகிறது இம்மாதத்தில்.

நள்ளிரவு தொடங்கிய இந்த தேடுதல் வேட்டையில் அதிகளவு பாதுகாப்பு படை வீரர்கள் இறங்கி உள்ளனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிஉள்ளார். இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது சிலர் கற்களை வீசியதால் சோதனையில் தொய்வு ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்வீச்சாளர்களை விரட்ட கூடுதல் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று உள்ளனர். பாதுகாப்பு படையினர் மற்றும் கல்வீச்சாளர்கள் இடையிலான மோதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டையானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நிலையை கட்டுக்குள் கொண்டுவர சமூக வலைதளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது, இருப்பினும் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி வருகிறது.


Next Story