ஜம்மு காஷ்மீர்: 2 இடங்களில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயம்


ஜம்மு காஷ்மீர்: 2 இடங்களில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயம்
x
தினத்தந்தி 1 Jun 2018 11:54 AM GMT (Updated: 1 Jun 2018 11:54 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் உள்ள  இரண்டு  இடங்களில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.   

புல்வாமா மாவட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ முஸ்தாக் வீடு மீது பயங்கரவாதிகள் திடீரென கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயமில்லை.  இந்த சம்பவத்தின் போது எம்.எல்.ஏ வீட்டில் இல்லை.  

அதனை தொடர்ந்து அனந்தநாக் மாவட்டம் கானாபாலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Next Story