மோடி பேசுவது எல்லாம் நேர்மையைபற்றி, கர்நாடகாவில் எல்லாம் சட்டவிரோத வழிகள் சந்திரபாபு நாயுடு தாக்கு


மோடி பேசுவது எல்லாம் நேர்மையைபற்றி, கர்நாடகாவில் எல்லாம் சட்டவிரோத வழிகள் சந்திரபாபு நாயுடு தாக்கு
x
தினத்தந்தி 1 Jun 2018 3:36 PM GMT (Updated: 1 Jun 2018 3:36 PM GMT)

மோடி பேசுவது எல்லாம் நேர்மையைபற்றி, ஆனால் கர்நாடகாவில் முன்னெடுத்த வழிகள் எல்லாம் சட்டவிரோதமானது என சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்து உள்ளார். #ChandrababuNaidu

அமராவதி,

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான மோதல் காரணமாக மத்திய பா.ஜனதா கூட்டணி அரசியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. ஆந்திர பிரதேச மாநில முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு விவகாரத்திலும் பாரதீய ஜனதா மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஆட்சிக்குவர ஒரு அரசியல் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள், அரசியல் கட்சி பணியை செய்யவில்லை என்றால் மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள். அதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியில் நடந்தது. சிறந்த அரசை நான் விரும்புகிறேன். அனைத்து தலைவர்களும் அவர்களுடைய மாநிலத்தை வலுப்படுத்த வேண்டும். மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், யாராக இருந்தாலும் சரி. பிரதமர் மோடி எப்போது நேர்மையைபற்றி பேசுகிறார். ஆனால் கர்நாடகாவில் மேற்கொண்டது எல்லாம் சட்டவிரோதமான வழிகள்தான். அவர்கள் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்தார்கள். ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜனதா நேற்றையை இடைத்தேர்தல்கள் முடிவில் தோல்வியை தழுவியது மக்களின் உணர்வின் எதிரொலிதான் என கூறினார். 

Next Story