பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக குறைப்பு


பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக குறைப்பு
x
தினத்தந்தி 2 Jun 2018 1:10 AM GMT (Updated: 2 Jun 2018 1:10 AM GMT)

கடுமையான விலை உயர்வை சந்தித்த பெட்ரோல், டீசல் விலை, கடந்த சில தினங்களாக வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் குறைக்கப்பட்டு வருகிறது. #PetrolPrice

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிறகு கடந்த மாதம் 14–ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து, குறைந்து வருகிறது. 

கடந்த புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா 1 காசு குறைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பெட்ரோலுக்கு 7 காசுகளும், டீசலுக்கு 5 காசுகளும் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று  பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. 

அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகளும், டீசல் லிட்டருக்கு 5 காசுகளும் குறைந்தது.இந்த நிலையில், 4-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை சிறிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 9 காசுகள் குறைந்து, முறையே ரூ.81.19 -க்கும், ரூ.72.97-ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றன. 

Next Story