பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறத்துறை மந்திரிகள் மாநாடு: தென் ஆப்ரிக்கா சென்றார் சுஷ்மா சுவராஜ்


பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறத்துறை மந்திரிகள் மாநாடு:  தென் ஆப்ரிக்கா சென்றார் சுஷ்மா சுவராஜ்
x
தினத்தந்தி 2 Jun 2018 10:08 AM GMT (Updated: 2 Jun 2018 10:08 AM GMT)

மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்ரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார். #SushmaSwaraj

புதுடெல்லி,

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் 10-வது உச்சிமாநாடு வரும் ஜூலை 25-ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறத்துறை மந்திரிகளின் கூட்டம் வரும் 4-ம் தேதி (திங்கட்கிழமை) தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தென்னாப்ரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். 

தென்னாப்ரிக்கா செல்லும் சுஷ்மா சுவராஜ் , பீட்டர்மேரிட்ஸ்பர்க் ரெயில் நிலையத்தில் மகாத்மா காந்தி தூக்கி எறியப்பட்ட வரலாற்று சம்பவத்தின் 125 வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.  

1983-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் மகாத்மா காந்தி இனப்பாகுபாடுகளுக்கு எதிராக  போராட்டம் நடத்தியது  ஒரு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story