மும்பையில் மன அழுத்தம் காரணமாக டாக்டா் தற்கொலை


மும்பையில் மன அழுத்தம் காரணமாக டாக்டா் தற்கொலை
x
தினத்தந்தி 4 Jun 2018 2:50 AM GMT (Updated: 4 Jun 2018 2:50 AM GMT)

மும்பையில் மன அழுத்தத்தின் காரணமாக டாக்டா் ஒருவா் மயக்க மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். #Suicide #Doctor

மும்பை, 

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் டாக்டா் ஒருவா் தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையில் பணியாற்றிவரும் டாக்டா் ஒருவா்  தற்கொலை செய்து கொண்டார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டாக்டா், மயக்க மருந்தை உட்கொண்டு தன்னை தானே மாய்த்துக்கொண்டுள்ளார் என்பது குறி்ப்பிடதக்கது.

இதைத்தொடா்ந்து மும்பை போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Next Story