அறுவை சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் அருண் ஜெட்லி


அறுவை சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் அருண் ஜெட்லி
x
தினத்தந்தி 4 Jun 2018 10:14 AM GMT (Updated: 4 Jun 2018 10:14 AM GMT)

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட அருண் ஜெட்லி பூரண நலத்துடன் வீடு திரும்பினார். #ArunJaitley

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு   சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர் நோய்த்தொற்று ஏற்படலாம் என கருதி கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்தநிலையில் மருத்துவமனையில் இருந்த போது கவனித்து கொண்ட டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அருண் ஜெட்லி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

வீட்டிற்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 3 வாரங்களாக கவனித்துக்கொண்ட  டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முழு உடல்நலம் பெறும் வரை வீட்டிலேயே ஓய்வு எடுக்க அருண் ஜெட்லிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story