சண்டிகாரில் பயங்கரம்: பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நீதிமன்றம் சென்றபோது ஆசிட் வீச்சு


சண்டிகாரில் பயங்கரம்: பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நீதிமன்றம் சென்றபோது ஆசிட் வீச்சு
x
தினத்தந்தி 4 Jun 2018 11:12 AM GMT (Updated: 4 Jun 2018 11:12 AM GMT)

சண்டிகாரில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நீதிமன்றத்திற்கு சென்ற போது ஆசிட் வீசப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது. #Chandigarh #AcidAttackசண்டிகார்,

சண்டிகாரை சேர்ந்த இளம்பெண் ஜம்முவை சேர்ந்த இளைஞரால் 2016-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பேஸ்புக் நண்பராக அறிமுகமான வாலிபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார், இதுதொடர்பாக விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக சென்ற இளம்பெண் மீது மர்ம ஆசாமிகள் இருவர் ஆசிட்டை வீசிஉள்ளனர். அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவர் ஆசிட்டை வீசினர் என பாதிக்கப்பட்ட பெண் கூறிஉள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள், குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். 

Next Story