கோவா மின் துறை மந்திரி மருத்துவமனையில் திடீர் அனுமதி


கோவா மின் துறை மந்திரி மருத்துவமனையில் திடீர் அனுமதி
x

கோவா மின் துறை மந்திரி பாண்டுரங் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பனாஜி,

கோவா மின் துறை மந்திரி பாண்டுரங் மட்கைகர் (வயது 53).  வடக்கு கோவாவின் கம்பர்ஜுவா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பணி ஒன்றிற்காக நேற்று மதியம் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என கோவாவின் சுகாதார துறை மந்திரி விஸ்வஜித் ரானே கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story