ஆபத்தில் அரசியலமைப்பு ; பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மக்கள் வாழ்கிறார்கள் - கோவா ஆர்ச்பிஷப்


ஆபத்தில்  அரசியலமைப்பு ; பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மக்கள் வாழ்கிறார்கள் - கோவா ஆர்ச்பிஷப்
x
தினத்தந்தி 5 Jun 2018 10:04 AM GMT (Updated: 5 Jun 2018 10:04 AM GMT)

அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மக்கள் வாழ்கிறார்கள் என கோவா ஆர்ச்பிஷப் கூறி உள்ளார். #Archbishop

பனாஜி

கோவாவின் பேராயர் மற்றும் டாமன் தந்தை பிலிப் நெரி ஃபெரோ எழுதி உள்ள கடிதத்தில்   அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது என்றும் மற்றும் மக்கள் நிறைய பாதுகாப்பின்மை உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.என கூறி உள்ளார்

பேராயர் கடிதத்தில் பேராயர் மக்களை அரசியலமைப்பை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மதச்சார்பின்மை பாதுகாக்கவும்  அறிந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உள்ளார்.

ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட கடிதம் ஆயர் ஆண்டில்  (ஜூன் 1 முதல் மே 31 வரை),  எழுதப்பட்டு உள்ளது.   (ஜூன் 1 முதல் மே 31 வரை), கோவா மற்றும் டாமன்  மறைமாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில் இன்று, நமது அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது (அதனால் தான்) பெரும்பாலான மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர். இந்த சூழலில்,   குறிப்பாக பொதுத்தேர்தல்கள் விரைவாக நெருங்கி வருவதால், நமது அரசியலமைப்பை நன்கு அறிந்து கொள்ளவும், அதை பாதுகாக்க கடினமாக உழைக்கவும் முயலுங்கள் என குறிபிட்டு உள்ளார்.


"சமீப காலங்களில், நம் நாட்டில் ஒரு புதிய போக்கு உருவாகிறது, எப்படி சாப்பிடுவது, எப்படி உடை  உடுத்துவது,  வாழ்வது மற்றும் வணங்குவது   என்பது குறித்து சீரான தன்மையைக் கோருகிறது. இது ஒரு வகையான  மோனோ-கலாச்சாரவாதம். மனித உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன, ஜனநாயகம் ஆபத்தில் தோன்றுகிறது ".

சிறுபான்மையினர் தங்கள் பாதுகாப்பிற்காக அஞ்சுகிறார்கள் என்றும், அபிவிருத்தி என்ற பெயரில்  மக்களுடைய நிலங்கள் மற்றும் வீடுகள் அவர்கள்  பிடியில் இருந்து பிடுங்கப்பட்டு வருகின்றன.

 "வளர்ச்சியால்  முதலில் பாதிக்கப்படுபவர்  ஏழைகள், ஏழைகளின் உரிமைகளை மிதித்துவிடுவது எளிது, ஏனென்றால் அவர்களுக்காக  குரல் எழுப்புபவர்கள் மிகக் குறைவு.

கத்தோலிக்கர்கள் மற்றும் சர்ச் சமூகங்கள் அரசியல் மற்றும் சமூக காரணங்களில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு பேராயர் அழைப்பு விடுத்துள்ளார். நமது திருச்சபைகளும் சிறு கிறிஸ்தவ சமுதாயங்களும் திருச்சபையின் இந்த பணியில் மூழ்கியிருக்க வேண்டும். இந்த சமூக அக்கறையானது திருச்சபைச் சமூகத்தின் எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டியது இல்லை ஒட்டுமொத்த மாநில மற்றும் நாட்டிற்கும் அடைய வேண்டும் " என கூறி உள்ளார்.

மேலும் கடிதத்தில் நாட்டில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றி பேராயர் கவலை தெரிவித்துள்ளார்.

இதே போல் சமீபத்தில் தில்லி பேராயர் அனில் கவுடோ கிறிஸ்தவ சமுதாயத்தினருக்காக ஒரு கதை எழுதி இருந்தது குறிப்பிடதக்கது.

தேசத்திற்காக பிரார்த்தனை நடத்தக் கோரி சுற்றறிக்கை அனுப்பிய சர்ச்சையில் சிக்கி இருந்தார். ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்கும் ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையை நாம் காண்கிறோம். புதிய அரசாங்கம் வேண்டும். மே 13, 2018 ல் இருந்து நம் நாட்டிற்காக ஒரு பிரார்த்தனை பிரச்சாரத்தை ஆரம்பிப்போம். நம்மையும் நம் நாட்டையும் புனிதமாக்க வேண்டும். என எழுதி இருந்தார்.

Next Story