தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: வெங்கையா நாயுடு பாராட்டு


தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: வெங்கையா நாயுடு பாராட்டு
x
தினத்தந்தி 6 Jun 2018 6:04 AM GMT (Updated: 6 Jun 2018 6:04 AM GMT)

பிளாஸ்டிக்கிற்கு தடைவிதிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். #VicePresidentOfIndia

புதுடெல்லி,

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இது சம்பந்தமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

அதில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறினார். 

மேலும் மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளிப்படும் நச்சுக் காற்றால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்தார். இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு தறுமாறு பழனிசாமி வேண்டுகோள்விடுத்தார்.

இந்தநிலையில் இது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியதாவது: 

பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக சிக்கிம் & உத்தரகண்ட் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை.விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் மராட்டியம், ஜார்கண்ட், நாகலாந்து ஆகிய மாநிலங்களை போல் மற்ற மாநிலங்களும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story