உலகின் முதல் மருத்துவ ரெயிலான லைஃப்லைன் எக்ஸ்பிரெஸ் ஜூன் 15ல் மகாராஷ்டிராவுக்கு வருகை


உலகின் முதல் மருத்துவ ரெயிலான லைஃப்லைன் எக்ஸ்பிரெஸ் ஜூன் 15ல் மகாராஷ்டிராவுக்கு வருகை
x
தினத்தந்தி 6 Jun 2018 7:53 AM GMT (Updated: 6 Jun 2018 7:53 AM GMT)

உலகின் முதல் மருத்துவ ரெயிலான லைஃப்லைன் எக்ஸ்பிரெஸ் அடுத்த வாரம் மகாராஷ்டிராவுக்கு வருகிறது.

மும்பை,

இந்திய ரெயில்வே மற்றும் அரசு சாரா தொண்டு அமைப்பு இணைந்து கடந்த 1991ம் ஆண்டு லைஃப்லைன் எக்ஸ்பிரெஸ் ரெயிலை அறிமுகப்படுத்தியது.

அதிலிருந்து இந்த ரெயில் நாடு முழுவதும் சென்று ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ உதவிகளை செய்து வருகிறது.  5 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் வருகிற 15ந்தேதி மத்திய மகாராஷ்டிராவில் இருந்து 480 கி.மீட்டர் தொலைவிலுள்ள லத்தூர் மாவட்டத்திற்கு வருகிறது.

அதன்பின் 3 வாரங்கள் அங்கேயே இருந்து மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.  பின் ஜூலை 6ந்தேதி உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் நகருக்கு புறப்பட்டு செல்லும்.

இந்திய கிராமப்புற பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு கட்டணம் இன்றி உலகிலுள்ள 2 லட்சம் பேர் சேவை மனதோடு மருத்துவர்களாக சேவை செய்துள்ளனர்.  இதுவரை 1.37 லட்சம் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.


Next Story