கர்நாடாகாவில் காலா கண்டிப்பாக வெளியாகும்: ரஜினிகாந்த பேட்டி


கர்நாடாகாவில் காலா கண்டிப்பாக வெளியாகும்:  ரஜினிகாந்த  பேட்டி
x
தினத்தந்தி 6 Jun 2018 10:35 AM GMT (Updated: 6 Jun 2018 10:35 AM GMT)

கர்நாடகாவில் காலா திரைப்படம் கண்டிப்பாக வெளியிடப்படும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Kaala

பெங்களூர்,

நாடு முழுவதும் காலா நாளை (7 ஆம் தேதி) வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா வெளியாகும் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் 320க்கும் அதிகமான இடங்களில் இன்று  ஜூன் 6ஆம் தேதி வெளியாகிறது. 

காலா படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் காலா படத்தின் தயாரிப்பாளரும், ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் வழக்கு தொடுத்து இருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ‘’காலா திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், காலா திரையிடப்படும் தியேட்டர்கள் குறித்த தகவலை மாநில அரசிடம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தது.  

இதனையடுத்து காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா ரக்ஷனா வேதிக் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் நடத்தும் போராட்டாத்தால்  கர்நாடகாவில் மட்டும் காலா படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிலிகுரியில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியார்களிடம் கூறியதாவது:

கர்நாடாகாவில் கால திரைப்படம் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த படம் கண்டிப்பாக கர்நாடாகவில் வெளியிடப்படும். ஒத்துழைக்க உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Next Story