தொழிலதிபர் ரத்தன் டாடா வுடன் அமித்ஷா சந்திப்பு


தொழிலதிபர் ரத்தன் டாடா வுடன் அமித்ஷா சந்திப்பு
x
தினத்தந்தி 6 Jun 2018 12:11 PM GMT (Updated: 6 Jun 2018 12:11 PM GMT)

' ஆதரவை திரட்டும் சந்திப்பு ' என்ற திட்டத்தின் படி இன்று அமித்ஷா, தொழிலதிபர் ரத்தன் டாடாவை சந்தித்து பேசினார். #AmitShah

மும்பை,

வருகின்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு புதிய யுக்திகளை கையாள தொடங்கியுள்ளது அதில் முக்கியமான ஒன்றாக சம்பார்க் ஃபார் சமர்தன் (சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்) என்ற திட்டத்தை பாஜக வகுத்துள்ளது.  

அதன்படி, பாஜக தலைமை 50 முக்கிய பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவது. அதோடு, பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்த்து ஒட்டுமத்தமாக ஒரு லட்சம் பேரை சந்தித்து மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்ட வேண்டும் என்ற திட்டத்தையும் அக்கட்சி உருவாக்கியுள்ளது. இவர்கள் குறைந்த பட்சம் 10 பேரையாவது சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என்பது ஆகும். 

இந்த திட்டத்தின்படி பாஜக தலைவர் அமித்ஷா பல்வேறு பிரபலங்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.  ராணுவ தளபதி தல்பீர் சிங், கபில் தேவ், சட்ட வல்லுநர் சுபாஷ் காஷ்யப், யோகா குரு பாபா ராம் தேவ், ஆகியோரை  அமித்ஷா  சந்தித்து பேசினார்.  இந்தச் சந்திப்பின் போது பாஜக அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து ராம் தேவிடம் அமித்ஷா எடுத்துரைத்தார்.

இந்தநிலையில் இன்று பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவை   அமித்ஷா சந்தித்து பேசினார்.  அப்போது மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை குறித்து பேசினார்.  அரசுக்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டுக்கொண்டார். அமித்ஷா மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உடன் இருந்தார். 

Next Story