பிறந்த பெண் குழந்தையை வீட்டின் முன் அநாதையாக விட்டு சென்ற காரில் வந்த பெண்


பிறந்த பெண் குழந்தையை வீட்டின் முன் அநாதையாக விட்டு சென்ற காரில் வந்த பெண்
x
தினத்தந்தி 7 Jun 2018 7:46 AM GMT (Updated: 7 Jun 2018 7:46 AM GMT)

உத்தர பிரதேசத்தில் பிறந்த பெண் குழந்தையை காரில் வந்த பெண் ஒருவர் வீடு ஒன்றின் வாசலில் அநாதையாக விட்டு சென்றுள்ளார்.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் கொத்வாலி காவல் நிலைய பகுதியில் வீடு ஒன்றின் முன் பெண் குழந்தை ஒன்று அநாதையாக கிடந்துள்ளது.  அதன் அழுகுரல் சத்தம் கேட்டு அருகில் வசித்த மக்கள் அங்கு வந்து குழந்தையை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்து உள்ளனர்.  இதில் கார் ஒன்றில் வந்த பெண் தனது பெண் குழந்தையை வீட்டின் முன் வைத்து விட்டு சென்றது தெரிய வந்துள்ளது.

அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story