கணவராகவே இருந்தாலும் மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்த கூடாது


கணவராகவே இருந்தாலும்  மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்த கூடாது
x
தினத்தந்தி 7 Jun 2018 11:56 AM GMT (Updated: 7 Jun 2018 11:56 AM GMT)

கணவராகவே இருந்தாலும் மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்த கூடாது என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பெங்களூர்

பெங்களூரை சேர்ந்த வந்தனா  தனது கணவர்  ராஜேஷ் குமாரிடம் தன்னுடைய ஏ.டி.எம் கார்டை  கொடுத்து 25,000 ரூபாய் எடுத்து வரும்படி கூறி இருக்கிறார். ராஜேஷ் பணம் எடுக்க முயன்ற போது பணம் வரவில்லை. ஆனால் வந்தனாவின் கணக்கில் இருந்து 25,000 ரூபாய் கழிந்திருக்கிறது.

இதனால் அவர்கள் வங்கி தரப்பை அணுகி உள்ளனர். அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. அதற்கு பதிலாக ஏ.டி.எம் கார்ட் ரகசிய எண்ணை வந்தனா தனது கணவரிடம் பகிர்ந்து கொண்டது விதி மீறல், என கூறி இருக்கின்றனர்.

அதன் பிறகு நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்ட போது சிசிடிவி காட்சிகள் ராஜேஷிற்கு சாதகமாக இருந்தாலும், விதி மீறல் எனும் காரணத்தை கூறி நீதி மன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது. எனவே இனி உங்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்துமாறு, உங்கள் நெருங்கிய உறவுகளிடம் கூட கொடுக்க வேண்டாம். பிறகு இதே போல ஏதாவது சம்பவம் நேர்ந்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்காது.


Next Story