தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம் + "||" + The offering of the devotees in Tirupati Ezhumalayanan temple is Rs.10 crores 48 auction

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் காணிக்கை தலைமுடி, வாகனங்கள் மூலம் திருப்பதிக்குக் கொண்டு சென்று, அங்கு சுத்தம் செய்து, நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலமாக ஏலம் விடப்படுகிறது.

அதன்படி பக்தர்களின் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. மொத்தம் 76 ஆயிரத்து 700 கிலோ எடையிலான தலைமுடி ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 200 கிலோ எடையிலான தலைமுடி விற்பனையானது. அதன் மூலம் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.10 கோடியே 48 லட்சம் வருமானம் கிடைத்ததாக திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.