108 ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் மருத்துவமனைக்கு 6 கி.மீ தூரம் கர்ப்பிணி பெண்ணை தூக்கி சென்ற உறவினர்கள்


108 ஆம்புலன்ஸ்  வராத காரணத்தினால் மருத்துவமனைக்கு 6 கி.மீ தூரம் கர்ப்பிணி பெண்ணை தூக்கி சென்ற உறவினர்கள்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:49 AM GMT (Updated: 9 Jun 2018 10:49 AM GMT)

ஆந்திராவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தும் வராத காரணத்தினால் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு 6 கி.மீ தூரம் உறவினர்கள் தூக்கி சென்றனர்.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனுக் என்ற கிராமத்தில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்வதற்கு போதுமான சாலை வசதி இல்லாததால் அந்த கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இந்தநிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

அவரை நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேரம் செல்ல செல்ல ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் கர்ப்பிணி பெண்ணை போர்வையை கொண்டு மூங்கில் பல்லாக்கு போன்று அமைத்து அவரது உறவினர்கள் சுமார் 6 கி.மீ தூரம் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். 

கடந்த 7-ம் தேதி இதே போன்ற சம்பவம் கேரள மாநிலம் அட்டப்பாடி என்ற கிராமத்தில் கர்ப்பினி பெண் ஒருவருக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் பிரசவத்திற்காக அவரை அவரது உறவினர்கள் போர்வையை கொண்டு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story