டெல்லியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும் வானிலை ஆய்வு மையம் தகவல்


டெல்லியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு  பலத்த காற்று வீசும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:36 AM GMT (Updated: 9 Jun 2018 11:36 AM GMT)

டெல்லியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Thunderstorm

புதுடெல்லி,

வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த மாதம் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் திடீரென புழுதி புயல் வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் பெய்தது. மணிக்கு பல கி.மீ. வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன.

இந்தநிலையில் டெல்லியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என்றும் புழுதிபுயலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story