12–வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தது


12–வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தது
x
தினத்தந்தி 10 Jun 2018 2:35 PM GMT (Updated: 10 Jun 2018 2:37 PM GMT)

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 12–வது நாளாக இன்றும் குறைந்தது. #Petroldiesel

புதுடெல்லி, 

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 12–வது நாளாக இன்றும் குறைந்தது. பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு 24 காசுகளும், சென்னையில் 26 காசுகளும் குறைந்தது. அதேபோல டீசல் விலை டெல்லியில் லிட்டருக்கு 18 காசுகளும், சென்னையில் 19 காசுகளும் குறைந்தது.

சென்னையில் பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களில் ரூ.1.74 குறைந்து, இன்று ஒரு லிட்டர் ரூ.79.69–க்கு விற்பனையானது. டீசல் விலை 12 நாட்களில் ரூ.1.29 குறைந்து, இன்று ஒரு லிட்டர் ரூ.71.89–க்கு விற்பனையானது.

Next Story