மத்திய ஊழல் கண்காணிப்பு துறை கமிஷனராக சரத்குமார் நியமனம்


மத்திய ஊழல் கண்காணிப்பு துறை கமிஷனராக சரத்குமார் நியமனம்
x
தினத்தந்தி 10 Jun 2018 10:30 PM GMT (Updated: 10 Jun 2018 9:37 PM GMT)

மத்திய ஊழல் கண்காணிப்பு துறை கமிஷனராக சரத்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய ஊழல் கண்காணிப்பு துறை தலைவராக கே.வி.சவுத்ரி உள்ளார். கமிஷனராக டி.எம்.பாசின் உள்ளார். ஒரு கமிஷனர் பணியிடம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் அந்த பணியிடத்துக்கு தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவரான சரத்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 4 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் தேசிய புலனாய்வு முகமையில் 4 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story