தொடர்ந்து 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு


தொடர்ந்து 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 1:19 AM GMT (Updated: 11 Jun 2018 1:19 AM GMT)

13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது, வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. #Petrol #DieselPrices

புதுடெல்லி,

அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு,  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை உயர்ந்ததால்  பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டதாக எண்ணை நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இந்த நிலையில், கடந்த மே 29 ஆம் தேதி முதல்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

சென்னையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 21 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.79.48 ஆகவும் டீசல் விலை 16 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.71.73-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story