நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து செல்ஃபி படம் எடுத்த பயிற்சி போலீஸ் கான்ஸ்டபிள் கைது


நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து செல்ஃபி படம் எடுத்த பயிற்சி போலீஸ் கான்ஸ்டபிள் கைது
x
தினத்தந்தி 2 July 2018 9:09 AM GMT (Updated: 2 July 2018 9:09 AM GMT)

நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து செல்ஃபி படம் எடுத்த பயிற்சி போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு உள்ளார்.

உமரியா,

மத்திய பிரதேசத்தின் உமரியா பகுதியில் போலீஸ் அகாடெமியில் பயிற்சி கான்ஸ்டபிளாக இருப்பவர் ராம் அவதார் ராவத் (வயது 28).  உமரியா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிபதியின் அறை வழியே இவர் சென்றுள்ளார்.

அந்த அறை காலியாகவும், திறந்தும் கிடந்துள்ளது.  இதனை கவனித்த குடிபோதையில் இருந்த ராவத் உள்ளே சென்று நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.  அதன்பின் தனது மொபைல் போனில் செல்ஃபி படம் எடுத்துள்ளார்.

இதனை நீதிமன்றத்தின் பியூன் சக்தி சிங் கவனித்து நீதிமன்ற அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.  அவர்கள் போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர்.  இதனை அடுத்து ராவத் கைது செய்யப்பட்டார்.  அவர் மீது பிரிவு 448ன் (அத்துமீறல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அவருக்கு பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது.


Next Story