நிதீஷுக்கு அனுமதி இல்லை பலகை வைக்க விரும்புகிறேன் என்ற தேஜ் பிரதாப் பேச்சுக்கு பதிலடி


நிதீஷுக்கு அனுமதி இல்லை பலகை வைக்க விரும்புகிறேன் என்ற தேஜ் பிரதாப் பேச்சுக்கு பதிலடி
x
தினத்தந்தி 2 July 2018 11:41 AM GMT (Updated: 2 July 2018 11:41 AM GMT)

பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமாருக்கு அனுமதி இல்லை என்ற பலகையை வீட்டின் முன் வைக்க விரும்புகிறேன் என கூறிய லாலு பிரசாத்தின் மகனுக்கு ஐக்கிய ஜனதா தளம் பதிலடி அளித்துள்ளது. #NithishKumar

பாட்னா,

பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  கடந்த 2014ம் ஆண்டு நிதீஷ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் இணைந்து மகா கூட்டணி அமைத்தனர்.  இதில் காங்கிரசும் இடம் பெற்றிருந்தது.  அதன்பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் 3 கட்சிகளும் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இது பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய பின்னடைவாக இருந்தது.  லாலுவின் மகனான 26 வயது நிறைந்த தேஜஸ்வி துணை முதல் மந்திரியானார்.

எனினும், கடந்த வருடம் நிதி முறைகேடு வழக்குகளில் தேஜஸ்வி சிக்கிய நிலையில் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது.

இறுதியில் கடந்த வருட ஜூலையில் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதீஷ் குமார் பாரதீய ஜனதாவுடன் இணைந்து புதிய அரசினை உருவாக்கினார்.  இந்த நிலையில் பாரதீய ஜனதாவுடனான கூட்டணியில் இருந்தும் நிதீஷ் குமார் சமீபத்தில் விலகினார்.

அவருக்கு எங்களுடனான கூட்டணி கதவுகள் திறக்கப்படாது என கடந்த வாரம் தேஜஸ்வி யாதவ் கூறினார்.

இந்நிலையில், இதுபற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் அளித்துள்ள பதிலில், நிதீஷ் குமார் மாமாவுக்கு இந்த பங்களாவில் நுழைய அனுமதி இல்லை என்ற பலகையை வீட்டின் முன் வைக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.சி. நீரஜ் குமார் இன்று பேசும்பொழுது, அவர்களது வீடு சி.பி.ஐ., வருமான வரி துறை மற்றும் அமலாக்க துறை ஆகியோரால் அடிக்கடி சோதனைக்கு உள்ளாகும் வீடு ஆகும்.  அங்கு செல்ல யார் விரும்புவார்? என கூறியுள்ளார்.


Next Story