காங்கிரஸ் பெண் செய்தி தொடர்பாளரின் 10 வயது மகளுக்கு டுவிட்டரில் கற்பழிப்பு அச்சுறுத்தல்


காங்கிரஸ் பெண் செய்தி தொடர்பாளரின் 10 வயது மகளுக்கு டுவிட்டரில் கற்பழிப்பு அச்சுறுத்தல்
x
தினத்தந்தி 2 July 2018 3:17 PM GMT (Updated: 2 July 2018 3:17 PM GMT)

காங்கிரஸ் பெண் செய்தி தொடர்பாளர் பிரியங்கா தனது 10 வயது மகளுக்கு டுவிட்டரில் கற்பழிப்பு அச்சுறுத்தல் வந்துள்ளது என போலீசில் புகார் அளித்துள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் கட்சியின் பெண் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி.  இவரது மகளுக்கு, கிரிஷ் கே என்ற பெயரில் நபரொருவர் கற்பழிப்பு மிரட்டல் விடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பிரியங்கா கூறும்பொழுது, தனது முகப்பு படத்தில் கடவுள் ராமரை அந்த நபர் வைத்துள்ளார்.  எனினும் இதுபோன்ற விசயங்களை வெளியிட அவர் தயங்கவில்லை என கூறியுள்ளார்.  இந்த பதிவு பின்னர் அழிக்கப்பட்டு விட்டது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி கோரேகாவன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளேன்.  நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்து உள்ளனர்.  மும்பை போலீசார் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது என அவர் கூறியுள்ளார்.

எனக்கு ஆதரவாக டுவிட்டர் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.  தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா சுலே இந்த கற்பழிப்பு மிரட்டலுக்கு தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளார்.


Next Story