தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் ஒருபோதும் நிறுத்தப்படாது கட்காரி திட்டவட்டம்


தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் ஒருபோதும் நிறுத்தப்படாது கட்காரி திட்டவட்டம்
x
தினத்தந்தி 3 July 2018 2:22 PM GMT (Updated: 3 July 2018 2:22 PM GMT)

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் ஒருபோதும் நிறுத்தம் செய்யப்படாது என மத்திய மந்திரி கட்காரி திட்டவட்டமாக கூறிவிட்டார்.


மும்பை, 

சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

மராட்டியத்தில் ராஜ் தாக்கரேயின் மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சி மற்றும் தொண்டு அமைப்புகள் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய  மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை நிதின் கட்காரி, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூல் செய்வது ஒருபோதும் நிறுத்தப்படாது. சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டே தீரும். நீங்கள் நல்ல சேவைகளை விரும்பினால், அதற்கான தொகையை செலுத்தத்தான் வேண்டும் என கூறியுள்ளார்.  

கடந்த 2017-ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 60 ஆயிரம் விபத்துகள் நேரிட்டதாகவும், அவற்றில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் பலியானதாகவும் சுட்டிக்காட்டிய நிதின் கட்காரி, நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய என்னுடைய அமைச்சகம் செயல்படுகிறது என்று கூறியுள்ளார். 

Next Story