இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை


இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 4 July 2018 6:26 AM GMT (Updated: 4 July 2018 6:26 AM GMT)

புதுடெல்லியில் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். #PMModi

புதுடெல்லி,

புதியதாக ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றவர்கள் விதிமுறைகளின்படி மாநில அளவில் 9 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பின்னரே மத்திய அரசு பணிகளுக்கு நியமனம் செய்யப்படுவர்.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற 176 கேடர்கள் மத்திய அரசின் பல்வேறு துறை உதவி செயலர்களாக நியமிக்கப்பட்டனர்.  இவர்கள் 13 வாரம்  பயிற்சி பெறுவார்கள். இவர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடுகிறார்.

அப்போது மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். 

Next Story