துவரம் பருப்பு, நெல், சோளம் உள்ளிட்ட பொருட்களுக்கு ஆதார விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு


துவரம் பருப்பு, நெல், சோளம் உள்ளிட்ட பொருட்களுக்கு ஆதார விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 4 July 2018 8:11 AM GMT (Updated: 4 July 2018 8:11 AM GMT)

துவரம் பருப்பு, நெல், சோளம் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

2018-2019 கரிப் (சம்பா) பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் உள்ளிட்ட தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலை, அவற்றின் உற்பத்தி விலையைப்போல் ஒன்றரை மடங்கு (150 சதவீதம்) அளவுக்கு நிர்ணயிக்கப்படும்.

அடுத்த வாரம் நடக்க உள்ள மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம், விவசாயிகளின் வருமானம் உயரும். அதுபோல், 2018-2019 சர்க்கரை பருவத்துக்கான கரும்பின் நியாய நிலை, இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என்று ஜூன் 30-ம் தேதி விவசாயிகளின் மத்தியில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்தநிலையில், டெல்லியில் பிரதமர் மோடி  தலைமையில்   மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துவரம் பருப்பு, நெல், சோளம் உள்ளிட்ட பொருட்களுக்கு  ஆதார விலை நிர்ணம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  

சாதாரண நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி, ரூ.1,750 ஆக நிர்ணயம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. 

முதல் தர நெல்லுக்கான குறைந்த பட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தி ரூ.1,770 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ஒன்றரை மடங்கு உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை. சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.275 ரூபாய் உயர்த்தி ரூ. 1700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி செலவாகும் என கூறப்பட்டுள்ளது.

Next Story