இந்தியாவுக்கு நான் வருவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது- ஜாகிர் நாயக்


இந்தியாவுக்கு நான் வருவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது- ஜாகிர் நாயக்
x
தினத்தந்தி 4 July 2018 8:42 AM GMT (Updated: 4 July 2018 8:42 AM GMT)

இந்தியாவுக்கு நான் வருவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது என ஜாகிர் நாயக் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. #ZakirNaik

புதுடெல்லி

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும், அதற்கு நிதியுதவி அளித்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஜாகிர் நாயக் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டும் அவருக்கு நோட்டீசு அனுப்பி இருக்கிறது. இருப்பினும், அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஜாகிர் நாயக் இந்தியா திரும்ப போவதாக தகவல் வெளியானது ஆனால் ஜாகிர் நாயக் தரப்பிலிருந்து அதற்கு மறுப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கு நான் வருவதாக கூறப்படும் தகவல்  முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. நான் நியாயமற்ற வழக்குகளில் பாதுகாப்பு   இருப்பதாக உணர வில்லை. அதுவரை நான்  இந்தியாவுக்கு வருவதற்கு எந்த திட்டமும் இல்லை.

இன்ஷா அல்லா  இந்த அரசாங்கம் நியாயமானது மற்றும் உண்மயானது  என்று நான் உணரும்போது, நான் நிச்சயமாக எனது தாயகத்திற்குத் திரும்புவேன். என ஜாகிர் நாயக்  ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.Next Story